மறாவிடத்துக் கொடை – கேளாது ஏற்றல். முக்கண் மூர்த்திக்குப் பூஇட்டான் – என்பது போன்றவற்றில் வரும் நான்காம் வேற்றுமை,மாறாவிடத்துக் கொடைப் பொருளில் அமையும். முக்கண் மூர்த்தியாம் இறைவன்தனக்குப் பூவிட வேண்டும் எனக் கேட்டிலன். பூ இடுதல் மக்கள் இயல்பு.இறைவன் இதனை மாறாமல் ஏற்பான். இது கிடப்புக் கோளி என்பதன் பாற்படும்.(வீ.சோ.) (பி. வி. 13.)