லிங்கம் – பால். சொற்களின் பால் ஒரே நிலைத்தாய் இல்லாமல் திரிதல்அநித்திய லிங்கமாம். இது வடமொழிப் பண்புத் தொகைத் தொடர்களில்,பண்புச்சொற்களைப் பண்புடைச் சொற்களின் பாலை யுடையவாக்கி (விசேடணம்விசேடியத்தின் பாலைப் பெறும் என்ற மரபிற்கு ஏற்ப)ப் புணர்க்கும் மரபுபற்றியது. தமிழிலும் கருஞ்சாத்தன் – கருஞ் சாத்தி – கருஞ்சாத்தர் -கருங்குதிரை – கருங்குதிரைகள் – என்பன வற்றை விரிக்குங்கால், கரியன்சாத்தன் – கரியள் சாத்தி – கரியர் சாத்தர் – கரிது குதிரை – கரியனகுதிரைகள் – என்றே விரித்தல் வேண்டும் என்பது தொல்காப்பியம் கூறுமுறை. ‘கரிய’ எனப் பொதுப்பட விரித்தலுமுண்டு. நன்னூல் ஆசிரியர்,வாமனன் – சிநேந்திரன் – போன்றாருடைய சத்தநூல் கொள்கை பற்றிக் ‘கருமைகுதிரை’ என்பது போலப் புணர்த்துவார். மேலே கூறியவாறு ‘கரியது குதிரை’என விரித்தால் ‘குதிரை கரியது’ என எழுவாயும் பயனிலை யுமாகவேமுடிவதன்றித் தொகை ஆகாது என்பதும் ஒரு கருத்து. (பி.வி. 49)