அநித்தம் எனவும்படும். இவை தொக்கும் தொகாமலும் வருவன.இரண்டுமா – இருமா, மூன்றுறுப்பு – மூவுறுப்பு, நான்கு கடல் -நாற்கடல், ஐந்தறிவு – ஐயறிவு, ஆறுமுகம் – அறுமுகம், ஏழ்கடல் -எழுகடல், எட்டுத்திசை – எண்டிசை – என்றிவ் வாறு தொகா மலும் தொக்கும்என இருநிலைமைக்கண்ணும் வருதலான் அநித்தியம்; ஒருநிலையை மாத்திரமே ஏற்புடைத்து எனக் கொண்டால் நித்தியம் ஆம் என்க.வேட்கை + அவா என்பது ‘செய்யுள் மருங்கின்’ (தொ. எ. 288 நச்) என்றவிதிப்படி வேணவா என இருத்தல் நித்தியம்.‘ ஐவாய வேட்கை அவாவினை’ (நாலடி. 59) என்புழி, இயல்பாய் நிற்றல் அநித்தியம். (பி. வி.27)