தெரியாநிலைச் செயப்படுபொருள். வினைச்சொல் கொள் ளும் ஆற்றலால்செயப்படுபொருள் இது என, ஆராயப்படா மலேயே, இயல்பாகப் புலப்படும் நிலை.அஃது ஐந்து வகைப்படும்.1. ஈச்சிதம் – கருத்துள்வழி 2) அநீச்சிதம் – கருத்துஇல்வழி 3)அவ்விருவழியும் 4) கருத்தா கருமம் ஆதல் 5) அகதிதம் என்பன அவை.இவற்றுள் முதலிரண்டையும் கல்லாடர் முதலாயினார் கருத்துள்வழிச்செயப்படுபொருள் – கருத்தில்வழிச் செயப் படு பொருள் – என்ப.எ-டு : 1) பாயை நெய்தான்,துவர ப் பசித்தவன் சோற்றை உண்டான்என்பவற்றுள், பாயை நெய்தல் – சோற்றை உண்டல் -இரண்டும் கருத்துள்வழிச் செய ப்படு பொருள்கள்.2) சோற்றைக் குழைத்தான்,தீக்கனாவைக் க ண்டான் – என்பவற்றுள், இரண்டும்கருத்தில்வழிச் செயப்படு பொருள்கள்.3) ஊரைச் செல்வான் பசும்புல்லைமிதித்தான், பாற்சோறு உண்கின்ற சிறுவன் அதன்கண்வீழ்ந்த தூளியை (தூசியை)த் தின்றா ன் – என்பவற்றுள், புல்லை மிதித்தலும் தூசியைத்தின்றலும் அநீ ச்சிதம்; ஊரைச் சேறலும் பாற்சோறு உண்டலும்ஈச்சிதம். ஆதலால் இஃது அவ்விருவழியும்வந்தவாறு.4) மாணாக்கனை ஊர்க்குப் போக்கினான் ஆசிரியன், மகட்போக்கிய தாய் – என்பவற்றுள், மாணாக்கன் மகள் என்னும் இருவரும்தனித்தனியே போவாரும் போக் கப்படுவாரும் ஆகலின் கருத்தாவேகருமம் ஆயிற்று.5) ஆசிரியனை ஐயுற்ற பொருளை வினவினான் -என்புழியும் பசுவினைப் பாலைக் கறந்தான் – என் புழி யும் வரும் ‘துகன்மம்’அகதிதம் ஆகிய ஈருருபு இணைதல். (பி. வி. 12)