அத்துச்சாரியை புணருமாறு

அகரஈற்றுச்சொல்முன் அத்துச்சாரியை வருமிடத்து அச் சாரியையின் அகரம்
கெடப் புணரும்.
எ-டு : மக + அத்து + கை
> மக + த்து + கை =
மகத்துக்கை
மெய்யீற்றுச் சொல்முன் அத்துச்சாரியை வருமிடத்து நிலைமொழியின்
ஈற்றுமெய் பெரும்பாலும் கெடும்.
எ-டு : மரம் + அத்து + கோடு
> மர + அத்து + கோடு
> மர+ த்து + கோடு = மரத்துக்
கோடு; வருமொழி வன்கணம் வரின், வந்த வல்லொற்று இடையே
மிகும்.
சிறுபான்மை நிலைமொழி யீற்றுமெய் கெடாமல், வெயி லத்துச் சென்றான் –
இருளத்துச் சென்றான் – விண்ணத்துக் கொட்கும் – என்று முடிதலுமுண்டு.
(தொ. எ. 133 நச். உரை)