அத்துச்சாரியையின் அகரம் கெடுதல்

அத்துச்சாரியை வருமிடத்து, நிலைமொழியீற்றில் இயல்பு வகையாலோ
விதிவகையாலோ அகரம் நிற்ப, அத்துச் சாரியை யின் அகரம் கெட்டு
முடியும்.
எ-டு : மக + அத்து + கை = மகத்துக்கை – இயல்பு அகரஈறு; மரம் +
அத்து + குறை
> மர + அத்து + குறை =
மரத்துக் குறை – விதி அகரஈறு (நன். 252)