நிலைமொழி அகரஈற்றுச் சொல்லாக நிற்க, அது வருமொழி யொடு சேருமிடத்து
இடையே அத்துச்சாரியை வரின், அத்துச் சாரியையின் அகரம் கெட, ஏனைய
எழுத்துக்களே நிலை மொழியொடு புணரும் என்பது விதி.
எ-டு : மக+அத்து+கை
> மக+த்து+கை =
மகத்துக்கை
(தொ. எ. 125.நச்).
ஒழிக + இனி
> ஒழிக்+இனி = ஒழிகினி; உற்ற
+ உழி
> உற்ற் + உழி = உற்றுழி;
செய்க + என்றான்
> செய்க்+என்றான் =
செய்கென்றான்; நாடாக + ஒன்றோ
> நாடாக்+ஒன்றோ =
நாடாகொன்றோ
இவ்வாறு வருமொழிமுதற்கண் இ உ எ ஒ என்பன வரின், நிலைமொழியீற்று
அகரம் கெடுதலே பெரும்பான்மை. மக + அத்து = மகத்து என, இங்கும்
நிலைமொழியீற்று அகரமே கெட்டது எனல் வேண்டும். நிலைமொழியீற்று அகரம்
கெட வருமொழி அகரம் சேர ‘மகத்து’ என்றாயிற்று என்பதனை விட,
வருமொழிமுதல் அகரம் கெட்டுப் புணர்ந்தது என்று கூறுதல் எளிதாகலின்
அங்ஙனம் கூறப்பட்டது.
மக + அத்து
> மக் + அத்து = மகத்து
என்பதனைவிட, மக + அத்து
> மக + த்து = மகத்து என்றல்
எளிதாகலின், முடிந்த முடிவில் வேற்றுமையின்று ஆதலின் இவ்வாறு
கூறப்பட்டது. (எ.ஆ.பக். 101)
அத்தின் அகரம் அகரமுன்னரேயன்றிப் பிறவுயிர் முன்னரும் ஒரோவழிக்
கெடுதலுண்டு.
எ-டு : அண்ணா + அத்து + ஏரி = அண்ணாத்தேரி; திட்டா + அத்து +
குளம் = திட்டாத்துக்குளம் (தொ. எ. 133 நச்.உரை)
நிலைமொழி மெய்யீற்றதாக, அத்துச்சாரியை வரின், நிலை மொழி ஒற்றுக்
கெடாது முடிதலுமுண்டு.
எ-டு : விண் + அத்து + கொட்கும் = விண்ணத்துக் கொட்கும்
வெயில் + அத்து + சென்றான் = வெயிலத்துச் சென் றான்; இருள் +
அத்து + சென்றான் = இருளத்துச் சென்றான் (நச். 133 உரை)