அது + மற்று + அம்ம
> அது + ஐ + மற்று + அம்ம =
அதை மற்றம்ம.
அது என்ற சொற்கும் மற்று என்ற சொற்குமிடையே ஐகாரச் சாரியை வந்தவழி,
நிலைமொழி உகரம் கெட அது ‘அத்’ என்றாக, அதனோடு ஐகாரம் சேர்ந்து ‘அதை’
என்றாகி வருமொழியோடு அதைமற்றம்ம எனப் புணர்ந்தது. (தொ. எ. 258 நச்.
உரை)