அதுவென் வேற்றுமைஉயர்திணைத்தொகைக்கண் பெறும் நிலை

நம்பிமகன் – உயர்திணைத்தொகைக்கண் அது என் உருபு வாரா மல் நம்பிக்குமகன் – என நான்கன்உருபு வருதல் வேண்டும்.நம்பியது மகன் – என ஆறாவது விரிப்பதாயின் அது என்னும் அஃறிணை ஒருமைகாட்டும் உருபு உயர்திணைப் பெயரோடு இணைதல் ஏலாது. ஆதலின், நான்காவதன்முறைப்பொருள் தோன்ற ‘நம்பிக்கு மகன்’ என விரித்தல் வேண்டும்.(தொ. சொ. 94 சேனா. உரை)நின்மகன் – நினக்கு மகன் ஆகியவன், எம்மகன் – எமக்கு மகன் ஆகியவன்,என்மகள் – எனக்கு மகள் ஆகியவள் என ஆக்கம் கொடுத்து நான்கனுருபுவிரித்துக் கூறல் வேண்டும். (தொ. சொ. 95 நச். உரை)நம்பிக்கு மகன் என்பது இலக்கணம் இல்வழி மயங்கல், ‘நம்பியது மகன்’என்பது இன்மையின் என்க. (தொ. சொ. 96 கல். உரை)