அதுவாகு கிளவி

இது நான்காம் வேற்றுமை கொண்டு முடியும் சொற்களில் ஒன்று. உருபுஏற்கும் பொருள் தானேயாய்த் திரிவதொரு பொருண்மை இது.எ-டு : கடிசூத்திரத்துக்குப் பொன் . (தொ. சொ. 76 சேனா. உரை)பொன் கடிசூத்திரமாகத் திரியும் ஆதலின் ‘அதுவாகு கிளவி’ என்றார்.கிளவி – பொருள். ஒன்று ஒன்றாகத் திரிந்து வரும் பொருட்கு வருவதுஇப்பொருண்மை. (தொ. சொ. 74 தெய். உரை)