எழுத்துவகையால் இருபத்தாறு பேதம் ஆம் எனப்பட்ட சந்தங்களுள் ஒன்று.ஐஞ்சீர்களை அடிதோறும் உடைய கலிநிலைத்துறை. (நெடிலடி விருத்தம்)முதலாம்நான்காம் அடிகள் கருவிளம் கூவிளம் தேமா தேமா தேமா என நிகழ,இடையீரடிகளும் கருவிளம் தேமா புளிமா தேமா தேமா என நிகழ்வதன்கண்இச்சந்தம் பயிலும். ஒற்றொழித்து உயிரும் உயிர்மெய்யுமாக ஓரடிக்குஎழுத்து 13 என்க.எ-டு : ‘பரிசில வெம்மொடு போது மம்பு மென்றாங்கரிசில வேந்தி யகன்று நீண்ட கண்மேற்குரிசிலை யன்று கனற்றி வெந்த காமன்கருசிலை போற்புரு வத்தாள் காட்சி மிக்காள்’ (வீ. சோ. 139உரை)