எழுத்துவகையால் இருபத்தாறு பேதப்படும் சந்தங்களுள் ஒன்று இது.புளிமா புளிமா தேமா தேமா தேமா புளிமா என்னும் வாய்பாட்டால் அறுசீர்அடிமுதலாவதும் நான்கா வதும் நிகழ, இடையிரண்டடிகளும் புளிமா புளிமா தேமாபுளிமா தேமா தேமா என்னும் வாய்பாட்டால் நிகழும் ஆசிரிய விருத்தத்துள்இச் சந்தம் பயிலும். ஒற்றெழுத்து நீங்கலாக உயிரும் உயிர்மெய்யும்ஓரடிக்கு எழுத்து 15 எனக் கொள்க.எ-டு : ‘அருண கிரண மேபோ லங்க ராகங் குலவும்தருண கலவி மாரன் தயங்கு சிந்தை யென்னோய்தெருண முழைய தென்றா லதுவோ சேலாங் கண்ணார்கருணை சிறிது பெய்யுங் காலை யுண்டே லினிதாம்.’ (வீ. சோ. 139உரை)