அதிகாரம்

அதிகாரம் என்னும் சொற்கு முறைமை என்று பொருள் கூறுவர் இளம்பூரணரும்நச்சினார்க்கினியரும்; பேராசிரியர் முறைமை, இடம், கிழமை என்று பொருள்கூறுவார் (பொ. 666). ஓரிடத்து நின்ற சொல் பல சூத்திரங்களொடு சென்றுஇயைதலையும், ஒன்றன் பொருள் பற்றி வருகின்ற பல ஓத்துக் களின்தொகுதியையும் அதிகாரம் என்பார் சேனாவரையர்.எ-டு : 1) ‘விளிவயி னான’ என்னும் தொடர் (133 சேனா.) விளிமரபில்இத்தொடருள்ள சூத்திரத்திற்கு முன்ன ரும் பின்னரும் உள்ளசூத்திரங்களொடு சென் றியைதல்.2) எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதி காரம் – என்பன.