அதிகாரம் காரணமாகச் சொற்பொருள்உணர்த்தல்

அதிகாரம் என்பது முறைமை – மரபு – இலக்கணம் – என்னும்பொருள்களையுடைய சொல். சொற்பொருள் உரைக்கும் ஏதுக்களாக, இ.கொ.தருபவற்றுள் இதுவும் ஒன்று. ‘கூடின் இன்பம் பிரியின் துன்பம்’ என்பதுஅகப்பொருட்கண்ண தாயின், அவ்வதிகாரம் பற்றித் “தலைவன் தலைவியொடு கூடின்இன்பம்; ,ஓதல் பகை தூது பொருள் முதலியவற்றால் உடன்படாது அவளை நீங்கில்அளவில் துன்பம்” என்றும், புறச்செய்யுட்கண் வரின், “கற்றாருடன் கலைபயிலின் அளவு பட்ட இன்பம்; நித்தியம் நைமித்திகம் காமியம் – முதலியவிரதங்களால் உடன்பட்டுப் பயிறல் ஒழியின் அளவுபட்ட துன்பம்” என்றும்கூறுக. (இ. கொ. 129)‘சொற்பொருள் உரைக்க ஏதுக்களாவன’ காண்க.