இடப்பொருள் என்னும் ஏழாம் வேற்றுமையுள், 1) உரிமை என்னும் விடயம்,2) ஒற்றுமை எனவும் கூட்டம் எனவும் இருவகைப்படும் ஓரிடம், 3) எங்கும்பரந்திருத்தல் – என இடம் மூவகைப்படும்.1. கடலுள் மீன் திரிகிறது; ‘நெடும்புனலுள் வெல்லும்முதலை’ (குறள் 495); ‘பகல்வெல்லும் கூகையை க் காக்கை’ (கு 431) – இவை விடயம் என்னும் ஆதாரப்பொருளான இடம். புனல்முதலைக்கும் பகல் காக்கைக்கும் உரிமை. ‘ கடல் ஓடா…… நிலத்து’(குறள். 496) என்புழி, எதிர்மறை யாலும் விடயம் உரிமை என்பதுஅறிக. கடல் நாவாய்க்கும், நிலம் தேர்க்கும் உரிமை.2. ஓரிடம் – ஒற்றுமை மேவுதலால் வந்தது; அ) மதிக்கண் மறு, கையின்கண்விரல், குன்றின்கண் குவடு, ஆண்டின்கண் இருது – போன்றன. பிரிதலின்றித்தொடர்புபட்ட சமவாய சம்பந்தம் எனும் தற்கிழமை இடமாகும் இது. ஆ)பாயின்கண் இருந்தான், தேர்க்கண் இருந்தான் – போல்வன பிரிதற்கு இயலும்தொடர்பான சையோக சம்பந்தம் எனும் பிறிதின் கிழமை.3. எங்கும் பரந்திருத்தல் (அபிவியாபகம்) – எள்ளின்கண் நெய்,தயிரின்கண் நெய் போல்வன எங்கும் மேவுதல். இஃது ஒரு பொருளின்கண்பிறிதொரு பொருள் வேற்றுமையின்றி ஒற்றுமைப்பட்டுக் கலந்திருத்தல் என்றஏழாம் வேற் றுமைப் பொருளான அபிவியாபகம் வந்தது.ஆதாரம் என்பது ஏழாம்வேற்றுமை ஏற்ற பெயர் இட மாகவும் காலமாகவும்ஆதல். அதன்கண் உள்ள அல்லது நிகழும் அல்லது தொடர்பு கொள்ளும் பொருள்ஆதேயம் எனப்படும். இங்ஙனம் வரும் ஆதார ஆதேயங்கள் அருவா யும் உருவாயும்வரும்.எ-டு : வடக்கண் வேங்கடம், ஆகாயத்தின்கண் பருந்து – இவற்றுள்,ஆதாரம்: அரு, ஆதேயம் : உரு. ‘நல்லார் கண் பட்டவறுமை’ (குறள். 408), உடலில் உணர்வு – இவற்றுள், ஆதாரம் : உரு, ஆதேயம்: அரு. (பி. வி. 13)