அதிகரணீ விருத்தம்

அ) மூன்று புளிமாங்கனியும் ஒரு புளிமாவும் பெற்று அமையும் அடிநான்காகி வரும் விருத்த வகை இது. (வி. பா. 24 பக். 49)எ-டு : ‘மயிலாலுவ குயில்கூவுவ வரிவண்டிசை முரல்வ;// மயில்பூவைகள் கிளியோடிசை பலவாதுகள் புரிவ; // அயில்வாள்விழிமடவாரென அலர்பூங்கொடி அசைவ; // வெயிலாதவர் புறமேகுற விரிபூஞ்சினைமிடைவ’ (விநாயக.)ஆ) மூன்று புளிமாங்கனிகளுக்கு ஈடாக முதலில் தேமாங்கனி அடுத்துஇருபுளிமாங்கனிகளும் இறுதியில் புளிமாவும் அமையும் அடி நான்காகிவருவதும் அது.எ-டு : ‘பூணித்திவை உரைசெய்தனை அதனாலுரை பொதுவே// பாணித்தது பிறிதென்சில பகர்கின்றது பழியால் // நாணித்தலையிடுகின்றிலென் நனிவந்துல கெவையுங் // காணக்கடி தெதிர்குத்துதியென்றான்வினை கடியான்’ கம்பரா. 7188இ) ஈற்றுச்சீர் புளிமாவுக்கு ஈடாகத் தேமா வர, மூன்றுகருவிளங்கனிகளும் ஒரு தேமாவும் அமைந்த அடி நான்காகி வருவதும் அதுஎ-டு : ‘எழுதுருவின எழுதளிரன இணரணிவன இரதம்இழுதுருவின கொழுமலரிடை யெழில்பொழிவன மதுகம்கழுதுருவின கஞலிலையன கழிமடலின கைதைபொழுதுருவின அணிபொழிலின பொழிதளிரன புன்னை’(பின்னீரடிகளிலும் ஈற்றுச்சீர் தேமா என நின்றது.) சூளா.433