‘அது +அன்று’ என்னும் புணர்மொழி ‘அதாஅன்று’ என்பது. இப்புணர்மொழித்
தொடர் ‘அஃதன்று’ என முற்றாயும், ‘அதுவே அன்றியும்’ என எச்சமாயும் சங்க
விலக்கியத்துள் பயின்று வருதல் காணலாம். ஆகவே, இச் சொற்கள் வினா விடை
முறையில் ‘அதுவா? அன்று’ என நின்று (அது- ஆ – அன்று) அதா – அன்று,
அதாஅன்று – என்று புணர்ந்துள்ளமை அறியலாம். (தொ.எ. 258. ச.பால.)