இது மூன்றாம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று. ஒன்றனான் ஒன்றுதகுதல் என்னும் பொருண்மை இது.எ-டு : வாயாற் றக்கது வாய்ச்சி, அறிவான் அமைந்த சான்றோர். இதுகருவிப்பாற்படும். (தொ. சொ. 74 சேனா. உரை.)அதற்றகு கிளவியாவது அதனால் தகுதியுடைத்தாயிற்று என்னும் பொருண்மைதோன்ற வருவது.எ-டு : கண்ணான் நல்லன் – நிறத்தான் நல்லன் – குணத்தான் நல்லன் -என உறுப்பும் பண்பும் பற்றி வருவன. (தொ. சொ. 75 தெய். உரை.)