இது நான்காம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று. ஒருபொருளினை மேல் பெறுதல் காரணமாக ஒரு தொழில் நிகழ்தல். [ ஒரு பொருட்டாக என்பதுபட வருதல் (தெய்.) ]எ-டு : கூழிற்குக் குற்றேவல் செய்யும். (தொ. சொ. 76 சேனா.உரை.)