ஒன்றற்குப் பயன்படுதல் என்னும் பொருட்டாகிய இது நாலாம் வேற்றுமைமுடிக்கும் சொற்களுள் ஒன்று. வினை – ஈண்டு, உபகாரம்.எ-டு : கரும்பிற்கு வேலி, ‘நில த்துக்கு அணிஎன்ப நெல்லும்கரும்பும்’ (நான். 9), மயிர்க்கு எண்ணெய். (தொ. சொ. 76 சேனா., 77 நச். கல்.உரை)உருபு ஏற்கும் பொருட்கு வினையாதலுடைமை கூறும்வழியும் நான்காம்வேற்றுமைப்பாலன.எ-டு : அவர்க்குப் போக்கு உண்டு, அவர்க்கு வரவு உண்டு,கரும்பிற்கு உழுதான். (தொ. சொ. 74 தெய். உரை.)