அதற்கு வினையுடைமை முதலியன

கோடற் பொருளுக்கு உரியவாய் வருமிவையெல்லாம் நான்காம்வேற்றுமைப்பாலனவாம்.அதற்கு வினையுடைமை – கரும்பிற்கு உழுதான், நெல்லுக்கு (நெல்லுவிதைப்பதற்கு) உழுதான்.அதற்கு உடன்படுதல் – சாத்தன் மணத்திற்கு உடன்பட் டான்.அரசன் போருக்கு உடன்பட்டான்.அதற்குப் படுபொருள் – ‘நெல்லுக்கு உமி உண்டு; நீர்க்கு நுரைஉண்டு.’ (நாலடி. 221)அதுவாகு கிளவி – தாலிக்குப் பொன் கொடுத்தான். ஆடைக்கு நூல்தந்தான். (கிளவி – பொருள்)அதற்கு யாப்புடைமை – மழைக்குக் குடைபிடித்தான். பசிக்கு உணவுஅளித்தான்.நட்பு – நெருப்புக்கு நெய் வார்த்தான்; கபிலர்க்கு நண்பன்பாரி.பகை – நெருப்புக்கு நீர் விட்டான்; பாம்பிற்குப் பகை மயில்.காதல் – தலைவன் தலைவிக்குப் பூச்சூட்டினான்; நட்டார்க்குக்காதலன்.சிறப்பு -‘மனைக்கு விளக்கம் மடவாள்’ (நான். 101) ; கல்விக்குச்சிறந்தது செவி.அன்ன பிற பொருள்களாவன : அவன் போர்க்குப் புணை யாவான்; அடியார்க்குஅன்பு செய்தான் – போல்வன (தொ. சொ. 76 ச. பால.)