இது நான்காம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று. ஒன்றற்கு ஒன்றுபொருத்தமுடைத்தாதல் என்னும் பொருண்மை இது.எ-டு : கைக்கு யாப்புடையது கடகம். (தொ. சொ. 76 சேனா.உரை)அதற்கு யாப்புடைமையாவது உருபேற்கும் பொருட்கு வலியாதல் உடைமை.எ-டு : போர்க்கு வலி குதிரை; நினக்கு வலி வாள். (தொ. சொ. 74தெய். உரை)