ஒன்றற்கு ஒரு பொருளை மேல் கொடுப்பதாக உடன்படுதல். இது நான்காம்வேற்றுமை முடிக்கும் சொற்களில் ஒன்று. ஒன்றன் செயற்கு உடன்பாடுகூறியவழியும் நான்காவதாம்.எ-டு : சாத்தற்கு மகள் உடன்பட்டார், சான்றோர் கொலைக்குஉடன்பட்டார். (தொ. சொ. 76. சேனா. உரை)