அதற்குப் படு பொருள்

பொதுவாகிய பொருளைப் பகுக்குங்கால் ஒருபங்கில் படும் பொருள்;ஒன்றற்கு உரிமையுடையதாகப் பொதுவாகிய பொருள் கூறிடப்படுதல். இதுநான்காம் வேற்றுமை முடிக்கும் சொற்களில் ஒன்று.எ-டு : சாத்தற்குக் கூறு கொற்றன் (தொ. சொ. 76 சேனா.உரை.)அதற்குப் படுபொருளாவது உருபேற்கும் பொருட்கு இயல்பு கூறும்வழியும்நான்காவதாம்.எ-டு : இதற்கு நிறம் கருமை ; இதற்கு வடிவம் வட்டம்; இதற்கு அளவுநெடுமை; இதற்குச் சுவை கார்ப்பு; இச்சொற்குப் பொருள் இது; இவ்வாடைக்குவிலை இது.அதற்குப் படு பொருள் என்றதனான், உடைப்பொருளும் அவ்விடத்திற்கு ஆம்பொருளும் காலத்திற்கு ஆம் பொருளும் ஆகி வருவன கொள்க.வருமாறு: அவற்குச் சோறு உண்டு, ஈழத்திற்கு ஏற்றின பண்டம்,காலத்திற்கு வைத்த விதை – என வரும். (தொ. சொ. 74 தெய். உரை)