இது நான்காம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று. சிறப்பு -ஒன்றற்கு ஒன்று சிறத்தல். சிறப்பு என்பது இன்றி யமையாமை பற்றிவரும்.எ-டு : வடுக அரசர்க்குச் சிறந்தார் சோழிய அரசர்.கற்பார்க்குச் சிறந்தது செவி. (தொ. சொ. 76 சேனா. உரை)