அதன் வினைப்படுத்தல்

ஒன்றனான் ஒன்று தொழிலுறுதல் என்னும் பொருண்மை. இது மூன்றாம்வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று.எ-டு : சாத்தனான் முடியும் இக்கருமம்; நாயான் கோட்பட்டான்.இது வினைமுதலின்பாற் படும். (தொ. சொ. 74 சேனா. 75 நச். உரை)அதன் வினைப்படுதலாவது ஒன்றன் தொழில்மேல் வருதல்.எ-டு : புலி பாய்தலான் பட்டான்; ஓட்டான் கடிது குதிரை.(தொ. சொ. 72 தெய். உரை.)