‘அதனோடு இயைந்த வேறுவினைக் கிளவி’

இது மூன்றாம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று. ஒன்றனோடு ஒன்றுஇயைந்த வேறு வினையாகல் என்னும் பொருண்மை இது.எ-டு : ‘மலையொடு பொருத மாஅல் யானை’ – இத்தொட ருள், மலை – யானை -என்னும் இரண்டனுள், மலைக்கு வினை இன்மையின் இது வேறுவினை ஆயிற்று.(தொ. சொ. 75 நச். உரை.)பொருதல் யானைக்குஅல்லது இன்மையின் இது வேறு வினைக் கிளவி ஆயிற்று.(தொ. சொ. 74 சேனா. உரை)வேறு வினையுடைய இரண்டு சொற்கள் தொடர்வது இப் பாருண்மை.எ-டு : காவொடு அறக்குளம் தொட்டான் – இதன்கண், தொடுதல்வினைகுளத்திற்கு அல்லது காவிற்கு இன்று ஆதலின், இது வேறுவினைக் கிளவிஆயிற்று. (தொ. சொ. 72 தெய். உரை)காவொடு அறக்குளம் தொட்டான் என்பது எடுத்துக்காட்டு. வேறுவினைஎன்பது ஒன்றன்கண்ணே வினையாதல். இதனுள், தொடுதல் குளம் ஒன்றற்கே ஏற்றவினையாதல் காண்க. (தொ. சொ. 75 கல். உரை)