‘அதனோடு இயைந்த ஒருவினைக் கிளவி’

இது மூன்றாம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று. ஒன்றனோடு ஒன்றுஇயைந்த ஒரு வினையாகல் என்னும் பொருண்மை இது.எ-டு : ஆசிரியனொடு வந்த மாணாக்கன்வருதல் தொழில் இருவர்க்கும் ஒத்தலின், ஒருவினைக் கிளவி ஆயிற்று.(தொ. சொ. 74 சேனா. உரை.)ஒருவினையான் இருபொருள் முடிவது இது.எ-டு : படையொடு வந்தான் அரசன் (தொ. சொ. 72 தெய். உரை.)இதன்கண் ‘ஒடு’ உயர்ந்த பொருளோடு இணைந்து வரும் என்பர் சேனாவரையர்(91) முதலியோர். ‘ஒடு’ இழிந்த பொரு ளோடு இணைந்து வரும் என்பர்தெய்வச்சிலையார் (88).