இது மூன்றாம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று. ஒன்றனோடு ஒன்றுஇயைந்த ஒப்பு அல்லாத ஒப்பினை உரைப்பது இது. ஒப்பல்லதனை ஒப்பாகக்கூறலின் ‘ஒப்புஅல் ஒப்புரை’ ஆயிற்று.எ-டு : ‘பொன்னோ டிரும்பனையர் நின்னொடு பிறரே’பொன்னோடு இரும்பை உவமித்தலை ஒப்பர் நின்னொடு பிறரை உவமிக்குமிடத்து- என்பது பொருள். (தொ. சொ. 74 சேனா. உரை.)உவமையின்றி இதுவும் அதுவும் ஒக்கும் என அளவினானும் நிறையினானும்எண்ணினானும் வருவன.எ-டு : இதனோடு ஒக்கும் அது, அக்கூற்றோடு ஒக்கும் இக்கூற்று.(தொ. சொ. 72 தெய். உரை.)நூலொடு நார் இயைந்தது போலும், முத்தொடு பவளம் கோத்தது போலும் – எனஒன்றனோடு ஒன்று இயைந்த ஒப்பு அல்லா ஒப்பினை உரைத்தல். இஃது ஒடுஎன்னும் மூன்றாம் வேற்றுமைக்குரிய பொருண்மையுள் ஒன்று. (தொ. சொ. 75.கல். உரை.)