அதனின் கோடல்

இது மூன்றாம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று. ஒன்றனான்ஒன்றைக் கோடல் என்னும் பொருண்மை இது.எ-டு : காணத்தான் கொண்ட அரிசி – இது கருவியின்பாற் படும். (தொ.சொ. 74 சேனா. உரை.)