இது மூன்றாம் வேற்றுமை முடிக்கும் சொற்களுள் ஒன்று.எ-டு : மண்ணான் இயன்ற குடம் – மண் முதற்காரணம்.முதற் -காரணமாவது காரியத்தொடு தொடர்புடையது. இதுகருவி.(தொ. சொ. 74 சேனா. உரை)ஒன்றனான் ஒன்று பண்ணப்படுதல் என்னும் பொருண்மை இது.இயலப்படுதற்குக் காரணமாகிய பொருள்மேல் உதாரண வாய்பாட்டான் வருவது.எ-டு : மண்ணினான் இயன்ற குடம்; அரிசியான் ஆகிய சோறு (தொ. சொ. 72தெய். உரை)