அதனின் ஆதல்

இது மூன்றாம் வேற்றுமை முடிக்கும் சொற்களில் ஒன்று. ஒன்றனான் ஒன்றுஆதல் என்னும் பொருண்மை இது.எ-டு : வாணிகத்தான் ஆயினான்.இது காரக ஏதுவாகிய கருவியின் பாற்படும்.(தொ. சொ. 74 சேனா. உரை)அதனின் ஆதலாவது ஆக்கத்திற்கு ஏதுவாகி வருவது.எ-டு : வாணிகத்தான் ஆயினான், எருப்பெய்து இளங்களை கட்டமையான்பைங்கூழ் நல்லவாயின.(தொ. சொ. 72 தெய். உரை)