‘அதனால்’ சுட்டுப்பெயருள் அடங்காமை

‘மழை பெய்தது அதனால் யாறு பெருகும்’ என்னுமிடத்தே, அதனால் என்னும்இச்சுட்டு, பொருளைச் சுட்டாது தொழிலைச் சுட்டுதலானும், ‘காரணக்கிளவி’கருவி ஆதலா னும் சுட்டுப்பெயருள் அடங்காது. ஆதலின் இஃது ஆலுருபு ஏற்றசுட்டுப்பெயர் ஆகாது. (தொ. சொ. 38 தெய். உரை.)