அது என்னும் சுட்டுப் பெயர் இடையே அன்சாரியை ஏற்று ஆல்உருபு பெற்றுஅதனால் என வந்து தனிப்பட்ட ஒன்றனைச் சுட்டி வரும்.எ-டு : ‘ஆக்கமும் கேடும்அதனால் வருதலான்காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு’ (குறள் 642)இதன்கண், ‘அதனால்’ என்னும் உருபேற்ற சுட்டுப்பெயர் ‘சொற் சோர்வு’என்பதனைச் சுட்டி வந்தது.இனி, பிரிக்க முடியாத நிலையில் ஒன்றாயமைந்து வரும் ‘அதனால்’ என்றஇடைச்சொல் முதல்வாக்கியத்தை அடுத்த வாக்கியத்தோடு இணைக்கும் இணைப்புஇடைச்சொல்லாக வரும்.எ-டு : சாத்தன் கையெழுதுமாறு வல்லன்; அதனால் தந்தைஉவக்கும்.ஈண்டு ‘அதனால்’ முதல் வாக்கியத்தை இரண்டாவதனோடு இணைக்கும்இணைப்பிடைச் சொல்லாகப் பயன்பட்டவாறு காண்க. இதனை ஆசிரியர் ‘சுட்டுமுதலாகிய காரணக் கிளவி’ எனவும், அது சுட்டுப்பெயர் போலச் சுட்டப்படும்பொருளை உணர்த்தும் சொற்குப் பின் கிளக்கப்படும் எனவும் கூறுவர். (தொ.சொ. 40 சேனா. உரை)