அதங்கோடு என்னும் ஊரில் வாழ்ந்த ஆசான் அதங்கோட்டாசான் எனப்
பெயர் பெற்றார். பிறந்து வாழ்ந்த ஊரால் பெயர் பெற்றவர்கள் சங்க காலப்
புலவர்களில் பலர், தொல்காப்பியர் தம் நூலை நிலந்தரு திருவிற் பாண்டியன்
அவைக் களத்தில் அதங்கோட்டாசானுக்கு ஐயந்திரிபறத் தெரிவித்தார் என்று
பனம்பாரனார் இயற்றியறப்புப்பாயிரம் கூறுகிறது. கன்னியாகுமரியிலிருந்து
திருவனந்தபுரம் செல்லும் பெரு வழியில் உள்ள கல்குளம் வட்டத்தைச் சார்ந்த
இருவிதாங்கோடு தான் இந்த அதங்கோடு என்றும், அதங்கோடு என்ற ஊர்ப் பெயரே இரு
என்ற சிறப்படையுடன் திருவதங்கோடு என வழங்கப் பெற்றதாகவும், இருவதங்கோடு
நாளடைவில் இருவிதாங்கோடு என்று மெல்ல மெல்ல மாற்றம் பெற்றதாகவும்
கருதுகின்றனர். இருவிதாங்கோடு என்று திரிந்த பெயரே நாட்டின் பெயராகவும்
வழங்குகின்றது ஆசிரியரை ஆசான் என்று வழங்கும் முறையை இன்றும் கொண்டுள்ள
கன்னியாகுமரி மாவட்டத்தைச் ‘ சேர்ந்ததே இவ்வூர் என்ற கருத்தும் உள்ளது.
அதங்கோடு என்ற ஊர் பண்டைக் காலத்தில் சிறப்புடைய பேரூராய் விளங்கியது
என்பதற்குரிய அடையாளமாக அவ்வூரில் பழைய கோட்டை, மதில் முதலியன ததைந்த
நிலையில் உள்ளன. அதங்கோடு என்ற பெயருடன் விளவங்கோடு வட்டத்திலும் ஓர் ஊர்
உள்ளது. “கோடு’ என்னும் பொதுக்கூறு உச்சி என்ற ஒரு பொருளை “அதவம்’ என்பது ஒரு
மரப்பெயர் என்று பொருள் தரும் சொல். குறுந்தொகைப் பாட்டொன்றால் தெரிகிறது
அதவங்கோடு என்ற ஊர்ப்பெயர், விளவங்கோடு என்பது போல மரப்பெயரால் பெற்ற ஓர்
ஊர்ப்பெயர். அல்லது அதுவமரங்கள் நிறைந்த மலைப்பகுதி என்னும் பொருளில் பெற்ற
பெயர், எனக் கருத இடம் உள்ளது. ஆகையால் அதவங்கோடு என்ற பெயரே அதங்கோடு என ஆக
இருக்க வேண்டும்.
“நிலந்தரு இருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் தான்மறை முற்றிய
அதங்கோட் டாசா.ற் கறில்தபத் தெரிந்து”
(தொல். சிறப்புப்பாயிரம்)
“ஆற்று அயல்எழுத்த வெண்கோட்டு அதவத்து
எழுகுளிறு மிதித்த ஒரு பழம்போலக்
குழைய கொடியோர் நாவே” (குறுந். 24, 3 5)