உயிரீற்றுப் பெயர்கள் அண்மை விளிக்கண் இயல்பாகும்.எ-டு : நம்பி வாழி, வேந்து வாழி, நங்கை வாழி, கோ வாழி.னகாரஈற்றுப் பெயர்கள் அண்மைவிளியில் அன் ஈறுகெட்டு அகரமாகும்.எ-டு : துறைவன் – துறைவ, ஊரன் – ஊர, சோழன் – சோழலகார ளகார ஈற்றுப் பெயர்கள் ஈற்றயல் நெடிதாயின் இயல் பாய்விளியேற்கும்.எ-டு : ஆண்பால், பெண்பால், கோமாள், கடியாள் இந் நிலைமைபெரும்பான்மையும் உயர்திணைக்கே கொள்ளப்படும். (தொ. சொ. 129, 133, 147நச். உரை)