அண்பல் முதல்

பல்லினது அணிய இடம் (தொ. எ. 96. இள. உரை)
அண்பல்லின் அடி (நச். உரை)
அண்பல் : வினைத்தொகை. நாவிளிம்பு அணுகுதற்குக் காரணமாகிய பல் என்று
அதற்கொரு பெயராயிற்று. (அண்பல் நாவிளிம்பு அணுகுதற்காகவே அமைந்தன
அல்ல. இங்ஙனம் உள்பொருள் அல்லதனை உள்பொருள் போலக் குறிப்பிடு தல்
தந்து புணர்ந்துரைத்தல் என்ற உத்திவகையாம்.) (தொ. எ. 86 நச். உரை)
மேல்வாய்ப் பற்களுக்குப் பின்னருள்ள அண்ணம் (எ. கு. பக்.40)
மேற்பல்லின் முதலிடம் (எ. ஆ. பக். 78)
மேல்வாய்ப்பல்லின் அடி என்பதே தெளிவான பொருளாம்.