அணி என்ற இடைச்சொல் புணர்ச்சி

அணி என்பது அணிய இடத்தை உணர்த்தும் இகரஈற்று இடைச் சொல். அஃது
அணிக்கொண்டான் என்றாற்போல வன்கணத்தொடு புணரும்வழி இடையே வல்லொற்று
மிகும். (தொ. எ. 236 நச்.)
அணி + அணி = அண்ணணி எனப் புணர்ந்து, அது வருமொழி வன்கணத்தொடு
புணரும்வழி இடையே வல்லொற்றுப் பெறும்.
வருமாறு : அண்ணணிக் கொண்டான். (தொ. எ. 246 நச்.)