அட்டவாயில்‌

அட்டவாயில்‌
இரு பெரு மன்னர்‌ போரிட்ட இடம்‌ என்பதைக்‌ குறிக்கும்‌ அட்டவாயில்‌ என்பது பின்னர்‌ ஊருக்குப்‌ பெயராய்‌ அமைந்தது என எண்ண வாய்ப்பு உள்ளது. இவ்வூர்ப்‌ பெயர்‌ அகநானூற்றுப்‌ பாடல்‌ ஒன்றில்‌ இடம்‌ பெற்றுள்ளது. பெருங்கொடி அசைந்து பறக்கும்‌ ஊர்‌ என்றும்‌, அங்குள்ள கழனிகள்‌ பசுங்கதிர்களைத்‌ தாங்கப்‌ பெருங்‌ கவினுடையன என்றும்‌ அக்‌கவினையொத்தக்‌ கவினுடையவன்‌ தலைவி என்றும்‌ கூறி, தலைவியின்‌ நலம்‌ பாராட்டப்‌ பெற்றுள்ளது. அகப்பெருள்‌ பற்றிக்‌ கூறும்‌ இலக்கியப்‌ பாடல்களில்‌ கர்ப்‌ பெயர்கள்‌ இடம்‌ பெற்றிருப்பதை நோக்கும்பொழுது ஓர்‌ உண்மை புலப்படும்‌. தலைவியின்‌ நலம்‌ பாராட்டப்பெறும்‌ இடங்‌களில்‌ ஊர்ப்பெயர்கள்‌ பல இடம்‌ பெற்றிருக்கின்றன. ஊரின்‌ வளமும்‌ பெயரும்‌ கூறி அப்பெருங்கவின்‌ ஒத்த நலமுடையான்‌ எனத்‌ தலைவியின்‌ நலம்‌ பாராட்டப்‌ பெற்றுள்ளது. இதன்‌ மூலம்‌ அக்‌ குறிப்பிட்ட நகரின்‌ வளமும்‌ நமக்குத்‌ தெரிகிறது.
பெருங்‌ கொடி நுடங்கும்‌ அட்டவாயில்‌
இருங்கதிர்க்‌ கழனிப்‌ பெருங்கவின்‌ அன்ன
நலம்பாராட்டி, நடை எழில்‌ பொலிந்து
விழவில்‌ செலீஇயர்‌ வேண்டும்‌……” (அகம்‌. 326:5 8)