வேதங்களின் உட்பிரிவாகிய அஷ்டகங்களின் பகுதியாகிய வருக்கங்களின்முதல்நினைப்பைத் தொடர்புபடுத்திச் சொல்லும் கோவை. இதற்கு அநுக்ரமணிகாஎன்ற பெயரும் உண்டு. யாப்பருங்கலக்காரிகை முதல்நினைப்புச் சூத்திரங்களை உடையது என்பதைக் குறிக்க வந்த உரையாசிரியர் குணசாகரர், ‘அருமறையகத்து அட்டகஓத்தின் வருக்கக் கோவை போல’ என உவமை எடுத்துரைத்தார்.(யா. கா. பாயிரம். 1 உரை)