வழக்கின்கண், நெய்க்குடம் – குளநெல் – கார்த்திகை விளக்கு – பூமரம்- செந்தாமரை – குறுங்கூலி – என்னும், பொருள் இடம் காலம் சினை குணம்தொழில் – பற்றிய அடைகள் இனம் உடையனவாய் இனத்தை நீக்கி வந்தன. உப்பளம்- ஊர்மன்று – நாள்அரும்பு – இலைமரம் – செம்போத்து – தோய்தயிர் -இவற்றுள் பொருள் முதல் ஆறும் பற்றிய அடைகள் இனம் இல்லன.இனிச் செய்யுள்வழக்கில் வருமாறு:‘பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம்’ (கு. 913), ‘கான் யாற்று அடைகரை’ (இனிய.5), ‘முந்நாள் பிறையின் முனியாது வளர்ந்தது’, ‘ கலவ மாமயில் எருத்தின் கடிமலர் அவிழ்ந்தன காயா’ (சீவக. 1558), ‘சிறுகோ ட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு’ (குறுந். 18), ‘ஆடு அரவு ஆட ஆடும் அம்பலத்து அமிர்தே’ – பொருள் முதல் ஆறும் பற்றியஅடைகள் இனம் உடையன வாய் இனத்தை நீக்கி வந்தன. ‘பொற்கோட்டு இமயம்’ (புற. 2), ‘ வட வேங்கடம் தென் குமரி’ (தொ. பாயி), ‘ வேனில் கோங் கின் பூம்பொகுட்டு அன்ன’ (புற. 321) ‘ சிறகர் வண்டு செவ்வழி பாட’ (சீவக. 74), ‘ செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்’ (புற. 38), ‘ முழ ங்கு கடல் ஓதம்’ – பொருள் முதல் ஆறும் பற்றிய அடைகள் இனம் இல்லன.(நன். 401 சங்.)