‘பாவம் செய்தான் நரகம் புகும்’ என்றமையான், அத்தொடர் ‘புண்ணியம்செய்தான் சுவர்க்கம் புகும்’ என்ற இனத்தைத் தருதலே யன்றி, அவன் ‘இதுசெய்யின் இது வரும்’ என்றறியும் அறிவிலி என்னும் இனம் அல்லதனையும்தந்தது.‘சுமந்தான் வீழ்ந்தான்’ என்றால், ‘சுமவாதான் வீழ்ந்தான் அல்லன்’என்னும் கருத்துச் சொல்லுவார்க்கு இன்றாதலின் அவ்வினத்தை ஒழித்து,‘சுமையும் வீழ்ந்தது’ என்னும் அல்லதனைத் தந்தது. (நன். 402 சங்.)‘காலை எழுந்து கருமத்திற் செல்வான் கோழி கூவிற்று’ என்றால், ‘ஏனைப்புட்கள் கூவுகில’ என்னும் கருத்துச் சொல்லுவானுக்கு இன்றாதலின்அவ்வினத்தை ஒழித்து, ‘பொழுது புலர்ந்தது’ என்னும் இனம் அல்லதனைத்தந்தது.‘பெய்முகில் அனையான்’ என்றால், ‘கைம்மாறு கருதாத பெருங்கொடையாளன்’என்னும் இனம் அல்லதனை இனம் இலதாகிய அடைமொழி தந்தது. இவ் அடை கொடாது‘முகில் அனையான்’ என வாளா கூறினும் இக்கொடைப் பொருள் தருமோ எனின்,அவ்வாறு கூறின் ‘முகில் வண்ணன்’ எனவும் பொருள்படும் ஆதலின், அதனைஒழித்துக் கொடைப் பொருளுக்கு உரிமை செய்தது இவ் அடையே (‘பெய்’) என்க.(நன். 443 இராமா.)