அடைநிலை

கலிப்பா உறுப்புக்களுள் ஒன்று. முன் தரவு தாழிசை என்னும்உறுப்புக்களையும், பின்னே வரும் சுரிதகத்தையும் அடைய நிற்றலின்அடைநிலை எனப்பட்டது. அது தனி நின்றும் சீராகலின் தனிநிலை எனவும்,தனிச்சொல் எனவும் கூறப் படும். (தொ. செய். 132 நச்.)