வண்ணச்சினைச்சொல் முதலில் அடைமொழியும் அடுத்துச் சினைப்பெயரும்அடுத்து முதற்பெயருமாக அமைந்து வருதலே வழக்கு. [ அடையாவது ஒரு பொருளது குணம் (இள.) ]எ-டு : செங்கால்நாரை, பெருந்தலைச்சாத்தன்வழக்கினுள் மரபு எனவே, செய்யுளில் ‘செவிசெஞ்சேவல்’,‘வாய்வன்காக்கை’ (புற. 238) என மயங்கியும் வரும் என்பது.வழக்கினுள் முதலொடு குணமிரண்டு அடுக்கி ‘இளம்பெருங் கூத்தன்’என்றாற் போலவும், செய்யுளுள் சினையொடு குணம் இரண்டு அடுக்கிச்‘சிறுபைந்தூவி’ (அக. 57) என்றாற் போலவும் வருதலுமுண்டு.அடையும் சினையுமாகப் பல அடுக்கி இறுதியில் முதலைக் குறிப்பிடும்சொல்லைக் கொண்டு, ‘பெருந்தோள் சிறு நுசுப்பின் பேரமர்க்கண் பேதை’ எனச்செய்யுளுள் மயங்கி வருதலுமுண்டு. (தொ. சொ. 26 நச். உரை)‘பெருந்தோள்…… பேதை’ என்புழி, பெருந்தோட்பேதை – சிறுநுசுப்பிற் பேதை – பேரமர்க்கட் பேதை – எனப் பிரித்து இணைத்தாலும்,பெருந்தோள் சிறுநுசுப்பு பேரமர்க்கண் – என்பன உம்மைத்தொகையாய் இணைந்துபேதை என்னும் முதற்பெயரோடு இணைந்தன என்றாலும், மயக்கம் இன்மை யின்,அத்தொடர்க்கண் அடைசினைமுதல் என்பன மயங்க வில்லை என்பது சேனாவரையர்கருத்து.