அடுக்கு அல்லவை அடுக்குப் போறல்

சொற்பின்வருநிலை போன்ற அணியிலக்கணம் கொண்டு சொற்கள் அடுக்குப் போலவருதல்.எ-டு :‘பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று’ (குறள் 296)(பொய்யாமையைத் தவறாது செய்யின்; செய்யாமையைச் செய்யாமையாவது -செய்தல்)‘இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை’ (குறள் 310)(இறந்தார் – சினத்தின்கண் மிக்கவர், இறந்தார் – செத்தவர்;துறந்தார் – (சினம்) விட்டவர், துறந்தார் – பிறவியைத் துறந்தமெய்ஞ்ஞானிகள்) (இ. கொ. 121)