ஒக்கும் ஒக்கும், மற்றோமற்றோ, அன்றேஅன்றே – அசைநிலை அடுக்குகள்ளர்கள்ளர், பாம்புபாம்பு, தீத்தீத்தீ, போபோபோ – விரைவுபற்றியது.எய்எய், எறி எறி எறி – வெகுளி பற்றியது.வருக வருக, பொலிக பொலிகபொலிக (திவ்.) – உவகை பற்றியது.படை படை, எங்கே எங்கே எங்கே – அச்சம் பற்றியது.உய்யேன் உய்யேன், வாழேன் வாழேன்; மயிலே மயிலே மயிலே, மடவாய் மடவாய்மடவாய்,‘புயலேர் ஒலிகூந்தல் இனியாய் இனியாய்குயிலேர் கிளவி நீ உரையாய் உரையாய்அயில்வேல் அடுகண் அழகீஇ அழகீஇ’‘ஐயாஎன் ஐயாஎ ன் ஐயா அகன்றனையே’ (சீவக.1802)- அவலம் பற்றியது.இவை பொருள்நிலை அடுக்கு.‘ஏஏ அம்பல் மொழிந்தனள் யாயே’‘நல்குமே நல்குமே நல்குமே நாமகள்’‘பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ’இவை இசைநிறை அடுக்கு.“அசைநிலை இரண்டினும், பொருள்நிலை (இரண்டினும்) மூன்றினும், இசைநிறை(இரண்டினும் மூன்றினும்) நான்கி னும் ஒருமொழி தொடரும்” என்றார்அகத்தியனார். (நன். 394 மயிலை.)