ஒரு சொல் அசைநிலைக்கண் இரண்டு முறையும், விரைவு – வெகுளி – உவகை -அச்சம் – அவலம் – முதலிய பொருள் நிலைக்கண் இருமுறையும் மும்முறையும்,செய்யுளிசை நிறைக்குமிடத்து இருமுறையும் மும்முறையும் நான்முறையும்அடுக்கும்.எ-டு : 1. ஒக்கும் ஒக்கும் : அசைநிலை அடுக்கு2. உண்டேன் உண்டேன்,போ போ போ : விரைவுவருக வருக,பொலிக பொலிக பொலிக : உவகைபா ம்பு பாம்பு தீத்தீத்தீ :அச்சம்உய்யேன் உய்யேன்,வாழேன் வாழேன் வாழேன் : அவலம்எய் எய், எறி எறி எறி :வெகுளிஇவை பொருள்நிலை அடுக்கு.3. ‘ஏஏ அம்பல் மொழிந்தனள் யாயே’‘நல்குமே நல்குமே நல்குமேநாமகள்’‘பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ’இசைநிறை அடுக்கு (நன். 395சங்.)