இரண்டு முதல் பல சொற்கள் அடுக்கி வருவது.1. ‘ இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்’ குறள். 448 ‘மூவா முதலா உலகம்’ (சீவக. 1.)நிகழ்காலப் பெயரெச்சம் எதிர்மறையாக அடுக்கி வந்தது.2. வந்து வந்தே கழிந்தது (கோவை. 61) – ‘யானை அறிந்தறிந்தும் பாகனையேகொல்லும்’ – (நாலடி. 213)என ஒரே வினையெச்சம் இரண்டு அடுக்கியது.3. ‘கண்டு கேட்டு உண்டுஉயிர்த்து உற்று அறியும்’ (குறள்.1101) – எனச் செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சம் பலஅடுக்கி வந்தன.4. ‘சென் றது சென்றது’, ‘வந்ததுவந்தது’ (நாலடி.4) என வினை முற்று அடுக்கியது.5. அவரவர், தீத்தீத்தீ – எனப் பெயர்கள் அடுக்கின.இவை யெல்லாம் மக்களிரட்டையும் விலங்கிரட்டையும் போலப் பிரிந்தும்பொருள் தருவனவாம்.6. இனி இரட்டைக்கிளவியாகிய ‘கலகல’ – நாலடி 140, – ‘குறுகுறு’ (புற.88) – என்பன போன்றவை பிரித்தால் பொருள்படா. துடிதுடித்து,புல்லம்புலரி, செக்கச்சிவந்த, கன்னங்கரிய – என்பன போன்றவை பிரித்தால்பின் மொழியே பொருள் தரும்; முன்மொழி பொருள் தாராது.இவ்விரு நிலையினையுடைய சொற்கள் இலையிரட்டை பூவிரட்டை – போன்றபிரிக்கப்படாத இரட்டைக் கிளவி களாம். (பி.வி. 39.)வடமொழியிலும், சிவசிவ – ரக்ஷ ரக்ஷ – புநப்புந : என இரண்டு சொல் அடுக்கி வருதல் உண்டு. வினைச்சொல் வகையில்,தேதீவ்யமான – முதலாகச் சிறப்புப் பொருளில் இரட்டித்தல் உண்டு என்பர்பி.வி. நூலார் (பி.வி. 39)