அடுக்கிய எச்ச முடிவு

வினையெச்சமும் அடுக்கி வரும் ; பெயரெச்சமும் அடுக்கி வரும்.வினையெச்சம் ஒருவாய்பாட்டானும் பலவாய்பாட் டானும் அடுக்கி ஒரே முடிபுகொள்ளும்.எ-டு : ‘வருந்தி, அழிந்து, கொய்துகொண்டு, ஏற்றி, இன்றி, மறந்து,மிசைந்து, அறம்பழித்துத் துவ்வாள் ஆகிய என் வெய்யோளும்’(புறநா. 159 : 6 – 14) – என, செய்து என்னும் ஒரு வாய்பாட்டுவினையெச்சமே அடுக்கி வந்து. ஒருவினையே கொண்டு முடிந்தது.உண்டு பருகூத் தின்னுபு வந்தான் – என, பலவாய்பாட்டு வினையெச்சங்கள்அடுக்கி வந்து ஒரு வினையே கொண்டு முடிந்தன.‘வருந்தி முலையள் அழிந்து இன்றி மிசைந்து உடுக்கையள் (அறம்)பழித்து’ – எனச் செய்து என் எச்சத்தினிடையே அவ்வினையெச்சமுற்றும்(முலையள்)அதன் குறிப்பெச்சமும் (இன்றி) உடன் அடுக்கி முடிந்தன.எ-டு : ‘பாயுந்து, தூக்குந்து, தரூஉந்து, பாயும் மிழலை’- எனப்பெயரெச்சம் ஒருமுறையான் அடுக்கி ஒரு பெயர் கொண்டு முடிந்தது. (புறநா.24)முதல் எச்சம் கொண்டு முடியும் சொல்லை ஏனைய எச்சங் களும்கொண்டுமுடியும்வழியேதான் எச்சங்கள் அடுக்கி வரும். (தொ. சொ. 235 நச்.உரை)