அடுக்கியல்

வண்ணகம் எனவும், அராகம் எனவும், முடுகியல் எனவும் அடுக்கியல்எனவும் கூறப்படும் கலிப்பாவின் உறுப்பு இது. தாழிசை அம்போதரங்கம்என்னும் உறுப்புக்களுக்கு இடையே இது நிகழும். (யா. கா. 32 உரை)தலையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவுக்கு ஓதப்பட்ட தரவும்தாழிசையும் பெற்ற அடியளவு இவ் வுறுப்புப் பெறும்; தாழிசைப் பின்னர்த்தனிநிலை பெற்றும் அதன்பின் அராக அடி நான்கு முதலாக எட்டு ஈறாக, நான்குசீர் முதலாக பதின்மூன்று சீர் ஈறாக வரப்பெறும்; இடையே அந்தாதித்தும்வரப்பெறும்; குறிலிணை பயின்ற அடியும் வரப்பெறும்; அடுக்கியல்,முடுகியல், அராகம், என்று மூன்று பெயரும் பெறும்; தேவரது விழுப்பமும்வேந்தரது புகழும் வண்ணித்து வருதலின் வண்ணகம் எனப்படும் என்ப ஒருசார்ஆசிரியர். (யா. வி. பக். 321)இவ் அராக உறுப்பு அளவடி முதலாகிய எல்லா அடியானும் வரப்பெறும்;சிறுமை நான்கடி, பெருமை எட்டடி, இடை யிடை எத்துணையாயினும் வரப்பெறும்;ஒருசாரனவற்றுள் அகவலும் வெள்ளையும் விரவி அராகமாயும் அருகிவரப்பெறும். (யா. வி. பக். 313 )